நாட்டையே உலுக்கிய குன்னூர் ராணுவ விபத்து - வரும் 8 ஆம் தேதி நினைவுச் சின்னம் திறப்பு.!
bibin ravath memorable statue open in kunnoor coming 8th
கடந்த 2021-ம் ஆண்டு கோவையிலிருந்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் ராணுவ மையத்திற்கு ஹெலிகாப்டர் ஒன்றில் இந்திய முப்படைகளின் தளபதியாக இருந்த பிபின் ராவத் சென்று கொண்டிருந்தபோது வானிலை மாற்றம் காரணமாக ஏற்பட்ட குழப்பத்தில் ஹெலிகாப்டர் குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் கிராமத்தில் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட மொத்தம் பதினான்கு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த நிலையில், வருகிற டிசம்பர் மாதம் 8-ம் தேதி மூன்றாம்ஆண்டு அஞ்சலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதன் படி விபத்து நடந்த இடத்தில் 14 பேரின் நினைவாக நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த நினைவுச் சின்னத்தில், “ஆன்மா அழியாதது. எந்த ஆயுதத்தாலும் அதை துளைக்க முடியாது. எந்த நெருப்பாலும் அதை அழிக்க முடியாது. தண்ணீராலும் அதை ஈரப்படுத்த முடியாது. காற்றாலும் அதை உணர்த்த முடியாது” என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளது.
வருகிற டிசம்பர் 8-ம் தேதி இந்த நினைவுச் சின்னம் திறந்து வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இது தொடர்பாக விரைவில் ராணுவம் தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
bibin ravath memorable statue open in kunnoor coming 8th