ஊருக்குள் புகும் கரடிகளின் தொடர் அட்டூழியம்! அச்சத்தில் கிராம மக்கள்!
bears entering city atrocities Villagers fear
நீலகிரி, குன்னூர் பகுதிகளில் சமீப காலமாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பாக கரடிகள் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குன்னூர் அருகே உள்ள முத்தநாடு பகுதியில் நுழைந்த கரடிகள் அங்கிருந்த நியாய விலை கடை மற்றும் அங்கன்வாடி கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்து அங்கிருந்த உணவுப் பொருட்களை சூறையாடி விட்டு சென்றன.
இதனால் இரவு நேரங்களில் கிராம மக்கள் வெளியே வருவதற்கு அச்சமடைந்துள்ளனர். அப்பகுதி மக்கள் வனத்துறையினரிடம் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அதன் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கரடி சேதப்படுத்திய பகுதிகளை ஆய்வு செய்தனர். மேலும் நியாய விலை கடை மற்றும் அங்கன்வாடி போன்றவற்றை பாதுகாக்கும் வகையில் கதவுகளில் இரும்பு கம்பிகளால் ஆன தடுப்புகள் அமைக்க வேண்டும் எனவும் கரடிகள் உண்ணக்கூடிய எண்ணெய் மற்றும் சர்க்கரை போன்ற பொருட்களை பாதுகாப்பான அறைகளில் வைக்க வேண்டும் எனவும் கிராம மக்கள் உத்தரவிட்டனர்.
இதனை தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் மீண்டும் கரடி ஊருக்குள் புகுந்தால் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
English Summary
bears entering city atrocities Villagers fear