தி.மலை || வேறொருவருடன் தொடர்பு - தட்டி கேட்ட மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த பானாகாத்தாடி பட இணை இயக்குனர்.! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் எழில் நகரை சேர்ந்தவர் பூர்ணிமா. இவருக்கு ஏற்கனவே கோவையை சேர்ந்த ஒருவருடன் திருமணமாகி சட்டப்படி விவாகரத்து நடந்ததைத் தொடர்ந்து, கடந்த 2016-ம் ஆண்டு குடியாத்தம் செட்டிக்குப்பம் பகுதியை சேர்ந்த லட்சுமிகாந்தன் என்பவரை மறுமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில், லட்சுமிகாந்தன் தற்போது வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முயற்சிப்பதை அறிந்த பூர்ணிமா சம்பவம் குறித்து கேட்டதற்கு லட்சுமிகாந்தன் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த கொலை மிரட்டல் குறித்து திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பூர்ணிமா புகார் மனு அளித்துள்ளார். 

அந்த மனுவில், என்னுடைய கணவர் லட்சுமிகாந்தன் சினிமா துறையில் பணிபுரிந்து வருகிறார். பானா காத்தாடி உள்ளிட்ட படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு லட்சுமிகாந்தை மறுமணம் செய்து கொண்டு சென்னையில் ஐந்தாண்டுகள் இருவரும் ஒன்றாக  வசித்து வந்தோம்.

திருவண்ணாமலையில் சொந்தமாக வீடு வாங்கி செட்டில் ஆகலாம் என கணவர் லட்சுமிகாந்தன் தெரிவித்ததால் தற்போது என்னுடைய தாய் வீட்டில் தங்கி இருக்கிறேன். இதற்கிடையே என்னுடைய  கணவர் லட்சுமிகாந்தன், சுவேதா என்ற பெண்ணுடன் தனியாக வசித்து வருவதாகவும் அவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தெரிகிறது. 

இதுகுறித்து கேட்டதற்கு என்னுடைய கணவர் லட்சுமிகாந்தன் கொலை மிரட்டல் விடுகிறார். எனவே, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில், அனைத்து மகளிர் காவல்துறையினர் லட்சுமிகாந்தனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

banakaththadi movie co director kill threat to wife


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->