சென்னையில் ட்ரோன்கள் பறக்கத் தடை - இதுதான் காரணமா? - Seithipunal
Seithipunal


சென்னையில் ட்ரோன்கள் பறக்கத் தடை - இதுதான் காரணமா?

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சட்டம் ஒழுங்கு நிலவரம், வளர்ச்சித் திட்ட பணிகள், அரசு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் விதம் உள்ளிட்டவைக் குறித்து மாவட்டம் தோறும் கள ஆய்வு செய்ய உள்ளார். 

அதில், முதற்கட்டமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கான ஆய்வு கூட்டம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்த ஆய்வில், மு.க ஸ்டாலின், காவல் அதிகாரிகளுடன் சட்டம் - ஒழுங்கு, குற்றச் செயல்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார்.

இதேபோல், நான்கு மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் அடிப்படை வசதிகள், வேளாண், நகர்ப்புற வளர்ச்சி, சுகாதாரம் உள்ளிட்ட 28 துறைகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு திட்டப் பணிகளை குறித்து நாளை ஆய்வு செய்கிறார்.

கள ஆய்வு மேற்கொள்ளும் முதலமைச்சர் காணொலி காட்சி மூலமாக மாவட்டத்தில் உள்ள மக்களை தொடர்பு கொண்டு பேசுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அவற்றை அரசு உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 

இந்த நிலையில், முதல்வர் வருகையை முன்னிட்டு மறைமலை நகரில் இரண்டு நாட்களுக்கு ட்ரோன் பறக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே முதல்வரின் வருகையை முன்னிட்டு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க திமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ban drones flying in four districts


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->