கைதிகளின் பற்கள் பிடுங்கிய விவகாரம் - காத்திருப்பு பட்டியலில் இருந்த 3 ஆய்வாளருக்கு மீண்டும் பணி.!!
balveer singh case three police inspectors got posting again
கைதிகளின் பற்கள் பிடுங்கிய விவகாரம் - காத்திருப்பு பட்டியலில் இருந்த 3 ஆய்வாளருக்கு மீண்டும் பணி.!!
திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் சரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட கைதிகளின் பற்களை பிடுங்கியதாக பரபரப்பு புகார்கள் எழுந்தது.
இது தொடர்பாக விசாரணைக்குழு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு விசாரணை நடத்தி அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங்கை இடைநீக்கம் செய்தனர். அதுமட்டுமல்லாமல், இந்த சம்பவத்தில் சில காவல்துறையினர் காத்திருப்போர் பட்டியலுக்கும் மாற்றப்பட்டு இருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட காவல் ஆய்வாளர்கள் மூன்று பேருக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு:- *கல்லிடைக் குறிச்சி ஆய்வாளாரக இருந்த ராஜகுமாரி குற்றாலம் காவல் ஆய்வாளாராகவும், *விக்கிரமசிங்க புரம் காவல் ஆய்வாளராக இருந்த பெருமாள் மணவாளக் குறிச்சி வட்டத்தின் ஆய்வாளராகவும், * உளவுப்பிரிவு காவல் ஆய்வாளராக இருந்த கோமதி மார்த்தாண்டம் காவல் ஆய்வாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
English Summary
balveer singh case three police inspectors got posting again