முதுமலையில் பரிதாபம்.! வளர்ப்பு யானை தாக்கி பாகன் உயிரிழப்பு..!
Bagan killed in Muthumalai farm elephant attack
நீலகிரி மாவட்டம் முதுமலையில் வளர்ப்பு யானை தாக்கி பாகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு மற்றும் அபயாரண்யம் பகுதிகளில் யானைகள் முகாம் உள்ளது. இங்கு ஒவ்வொரு யானைக்கும் பாகன் நியமிக்கப்பட்டு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் தெப்பக்காடு முகாமில் மசினி என்ற யானையை பராமரித்து வந்த பாகன் பாலன் என்பவர், இன்று காலை வழக்கம்போல் யானைக்கு உணவளிக்க சென்றுள்ளார்.
அப்பொழுது திடீரென யானை பாலனை தாக்கியுள்ளது. இதையடுத்து பாலனை, உடன் பணிபுரிந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் பாலன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த போலீசார் இதுகுறித்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Bagan killed in Muthumalai farm elephant attack