விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையின் படுக்கையாக மாறிய வராண்டா.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை "என் மண் என் மக்கள்" என்ற பெயரில் நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அவர் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை பார்வையிட்டுள்ளார்.

அப்போது பிறந்து மூன்று நாட்களே ஆன பச்சிளம் குழந்தை தன் தாயுடன் மருத்துவமனையின் வராண்டாவில் படுக்க வைக்கப்பட்டிருந்த காட்சியை பார்த்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் படுக்கை வசதி பற்றாக்குறையினால் அறுவை சிகிச்சை மூலம் பிறந்து மூன்று நாட்களே ஆன பச்சிளம் குழந்தை தன் தாயுடன் வராண்டாவில் படுக்க வைக்கப்பட்டு இருக்கும் காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுவது தொடர்ந்து இருந்து வந்துள்ளது.

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட சாராய அமைச்சருக்கு கூட தனியார் மருத்துவமனையில் தான் சிகிச்சை வேண்டும் என்று கேட்டதையும் பொதுமக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.

தங்கள் கட்சியினர் நடத்தி வரும் தனியார் மருத்துவமனைகளை ஊக்குவிப்பதற்கு ஏழை மக்கள் சிகிச்சை பெரும் அரசு மருத்துவமனைகளை திமுக பாதாளத்திற்கு தள்ளிக் கொண்டிருக்கிறதா? என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

baby sleep hospital varanda in vilupuram govt hospital


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->