தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விழிப்புணர்வு கூட்டம்..பேக்கரி விற்பனையாளர்கள் பங்கேற்பு!  - Seithipunal
Seithipunal



திருவள்ளூரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு  பலகாரங்கள் மற்றும் காரவகைகள் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

 திருவள்ளூரில் உள்ள தனியார் ஹாலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு  பலகாரங்கள் மற்றும் கார வகைகள் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட நியமன அலுவலர் ஆர்.கதிரவன் தலைமை தாங்கி தாங்கி பேசினார்.
 
தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விதவிதமான இனிப்பு  பலகாரங்கள், காரவகைள் மற்றும் கேக் போன்ற உணவுப் பொருட்களை மக்கள் விரும்பி வாங்கி உண்பதும்,  சொந்த பந்தங்களுக்கு இதனை அன்பளிபாக அளித்து மகிழ்வதும் நமது கலாச்சாரமாக விளங்கி வருகிறது.தீபாவளி பண்டிகை காரணமாக இனிப்பு மற்றும் காரவகைகளை தயாரித்து விற்பனை செய்யும் அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து உரிமம் பெற்று பொது மக்களுக்கு விநியோகம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும் இனிப்பு காரவகைகள் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பவர்கள் தரமான முலப்போருட்களைக் கொண்டு சுத்தமாகவும் சுகாதாரமாகவும் தரமான முறையில் கலப்படமில்லாது தயாரித்து பாதுகாப்பான முறையில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்.உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களையோ, அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான நிறமிகளையோ உபயோகிக்கக் கூடாது.  மேலும் ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை மறுபடியும் பயன்படுத்தி இனிப்பு மற்றும் காரவகைகள தயாரிக்க கூடாது.

இதனை ஆர்.யு.சி.ஓ திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட முகவரிடம் வழங்கவேண்டும். பேக்கிங்  செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கு. விபரச்சீட்டு இடும்போது அதில் தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவு  பொருளின் பெயர், தயாரிப்பு அல்லது பேக்கிங் செய்யப்பட்ட தேதி,  சிறந்த பயன்பாட்டு காலம் (காலாவதியாகும் காலம்) சைவ மற்றும் அசைவ குறியீடு ஆகியனவற்றை அவசியம் குறிப்பிடவேண்டும்.  உணவு பொருட்களை ஈக்கள்,  பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் வைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்திடல் வேண்டும்.

உணவுப் பொருட்களை நியூஸ் பேப்பரில் மடித்து தரக்கூடாது.இதில் ஏதேனும் குறைகள் காணப்பட்டாலோ உணவு பாதுகாப்பு சட்ட விதிகளுக்கு புறம்பாக இருந்தாலோ அத்தகைய உணவு வணிகர்கள் மீது உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டம் 2006-ன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவள்ளு்ர் மாவட்ட நியமன அலுவலர் ஆர்.கதிரவன் தெரிவித்தார்.

கூட்டத்தில் பேரம்பாக்கம் ஏவிஏ ஹோட்டல் உரிமையாளர் ஏவிஏ.ராஜ்குமார், திருவள்ளூர் பெரம்பூர் சீனிவாசா ஹோட்டல் மேலாளர் கே.அருண்குமார்,  கங்கா ஸ்வீட்ஸ் மேலாளர் ராதாகிருஷ்ணன், நெல்லை ஸ்வீட்ஸ் உரிமையாளர் ராஜசேகர், கடம்பத்தூர், அய்யனார் ஸ்வீட்ஸ்  உரிமையாளர் பெருமாள், நந்தினி ஸ்வீட்ஸ் உரிமையாளர் சந்திரசேகர் உட்பட இனிப்பு பலகாரங்கள் மற்றும் காரவகைகள் தயாரிப்பாளர்,விற்பனையாளர்கள்,  நுகர்வோர்கள்  கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Awareness meeting ahead of the Diwali festival Participation of bakery sellers


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->