தாய்லாந்தில் விடுமுறை கொண்டாடும் ராய் லட்சுமி – பட வாய்ப்பே இல்லனாலும்.. கவலையே இல்லாமல் ஜாலியா ஊர் சுற்றும் நடிகை ராய் லட்சுமி! - Seithipunal
Seithipunal


தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப் படங்களில் நடித்துள்ள நடிகை ராய் லட்சுமி, தற்போது தாய்லாந்தில் விடுமுறையை கொண்டாடி வருகிறார். அங்கிருந்து பகிர்ந்த புகைப்படமும், அவர் எழுதிய கவிதைபோன்ற பதிவும் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

பெங்களூரில் பிறந்த ராய் லட்சுமிக்கு, சிறுவயதிலிருந்தே சினிமா மீது ஆர்வம் இருந்தது. பள்ளிப் பருவத்திலேயே சினிமா கனவை மனதில் வைத்திருந்த அவர், கல்லூரி படிப்புடன் மாடலிங் துறையில் காலடி வைத்தார். ஆரம்பத்தில் சிறிய விளம்பரங்களில் நடித்த இவர், புரூ காஃபி விளம்பரத்தின் மூலம் கவனம் பெற்றார். பின்னர் சரவணா ஸ்டோர்ஸ், ஃபேர் அண்ட் லவ்லி போன்ற பிரபல விளம்பரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இவரது சினிமா பயணம் கற்க கசடற படத்தின் மூலம் துவங்கியது. விக்ராந்துடன் இணைந்து நடித்த அந்த படம் வெற்றி பெறாததால், தெலுங்கு படங்களுக்கு மாறினார். அங்கு நடித்த காஞ்சனா கேபிள் டிவி மற்றும் பல படங்களும் பெரிய வரவேற்பை பெறவில்லை.

பின்னர் தமிழில் தாம்தூம் படத்தில் ஜெயம் ரவியுடன் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார். அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘யாரோ மனதிலே’ பாடல் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பெயர் பெற்றார். தொடர்ந்து முத்திரை, வாமனன், நான் அவன் இல்லை 2, ஒரு காதலன் ஒரு காதலி உள்ளிட்ட படங்களில் நடித்தாலும், பெரிய அளவில் முன்னேற முடியவில்லை.

பாலிவுட்டில் ஐட்டம் பாடல்களிலும், சரவணன் நடித்த தி லெஜண்ட் படத்தில் பாடலிலும் நடித்த ராய் லட்சுமி, கடந்த ஆண்டு மலையாளத்தில் டிஎன்ஏ படத்தில் ஐபிஎஸ் அதிகாரியாகவும், பாய்சன் 2 வெப் தொடரிலும் நடித்தார்.

சினிமாவில் தற்போது அதிக வாய்ப்புகள் இல்லாததால், அடிக்கடி வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் ஈடுபடும் ராய் லட்சுமி, தற்போது தாய்லாந்தின் கடற்கரையில் எடுத்த கவர்ச்சியான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில்,“காலம் மெதுவாகும்… காற்றில் உப்பின் வாசனையும் அமைதியின் உணர்வும் கலந்திருக்கிறது. அழகு சத்தமாக இருக்க வேண்டிய அவசியமில்லை… அதை உணர வேண்டும்.”என்று கவிதைபோன்ற வரிகளை எழுதியுள்ளார்.

அவரது பதிவைப் பார்த்த ரசிகர்கள்,“அடடா… கவிதை கவிதை!”என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

சினிமா வாய்ப்புகள் குறைந்திருந்தாலும், சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வரும் ராய் லட்சுமி, தனது புதிய புகைப்படங்கள் மற்றும் பதிவுகளால் எப்போதும் பேசுபொருளாகி வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Despite not having any film opportunities Actress Rai Lakshmi is roaming around the country without any worries


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->