தென்காசி, விளாத்திகுளம் தொகுதி நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை.!!
cm mk stalin meet thenkasi and vilathikulam dmk excuetives
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'உடன்பிறப்பே வா' என்ற தலைப்பில் சட்டமன்ற தொகுதி வாரியாக தி.மு.க. நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். இந்த சந்திப்பின் போது முக்கிய ஆலோசனைகளை அவர்களுக்கு வழங்கி வருகிறார்.
அந்த வகையில், முதலமைச்சர் மு க ஸ்டாலின், நேற்று மதுரை தெற்கு மற்றும் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கட்சி நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து பேசினார். அப்போது அவர், தொகுதி வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? என்று கேட்டறிந்தார்.
தொடர்ந்து, தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும், அரசின் திட்டங்களையும், சாதனைகளையும் மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 'உடன்பிறப்பே வா' நிகழ்ச்சியில் இன்று விளாத்திகுளம் மற்றும் தென்காசி தொகுதி நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார். நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கவுள்ளார்.
English Summary
cm mk stalin meet thenkasi and vilathikulam dmk excuetives