சாலைய காணோம்...பலகை மட்டும் தான் தெரியுது!- திமுக அரசை கடுமையாக தாக்கிய நயினார் நாகேந்திரன் - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கடும் விமர்சனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.அதில் அவர் தெரிவித்துள்ளதாவது,"பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.4.63 கோடி மதிப்பில் தூத்துக்குடி மாவட்டம் கீழ்நாட்டுக்குறிச்சி-தாப்பாத்தி இடையிலான சாலை அமைப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது.

ஆனால், மழை வராத நிலத்தில் பூக்கும் மாயப்பூ போல, சாலை இல்லாமல் விளம்பர பலகை மட்டும் முளைத்துள்ளது. ஜூலை மாதத்திலேயே சாலை அமைக்கப்பட்டதாக புனைவு பலகை எழுந்துள்ளது. இதுவே ‘விளம்பர மாடல் அரசு’ எனப்படும் திமுகவின் சாதனை" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் குறிப்பிட்டதாவது,"சாலை இல்லாமல் திணறும் கிராம மக்களுக்கு மத்திய அரசு வழங்கிய வரப்பிரசாதமான திட்டத்தை திமுக அரசு அலட்சியமாக புறக்கணித்து விட்டது. மக்களின் வரிப்பணத்தை சுருட்டி விளம்பர பலகையில் பூசணி வெட்டுவது தான் திராவிட மாடலா? மத்திய நிதியை தங்கள் சொந்த கஜானாவாக மாற்றிக் கொண்ட திமுகவினர் வெட்கத்தால் தலைகுனிய வேண்டியது அவசியம்" என்று தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி,"இந்த மோசடியை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட பாஜக தாமரை தோழர்கள் போராட்டம் நடத்தினர். எனவே, உடனடியாக ஒப்பந்ததாரர் திரு. எர்ஷாத்கான் மீது கடும் நடவடிக்கை எடுத்து, சாலை பணியை தொடங்க வேண்டும். இல்லையெனில் பாஜக சார்பில் மாபெரும் மக்கள்போராட்டம் வெடிக்கும் என்பதை தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன்” என்று நயினார் நாகேந்திரன் எச்சரித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

We dont see road only board visible Nayinar Nagendran severely attacks DMK government


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->