மனநல பாதிக்கப்பட்ட இளம்பெண் மீது கொடூரத் தாக்குதல! காவலர்கள் கைது...!
Brutal attack on mentally challenged young woman Police officers arrested
கர்நாடகா, ராமநகர் அருகே அரோஹள்ளி பகுதியில் பரபரப்பை உருவாக்கிய ஒரு சம்பவம் வெளியாகியுள்ளது. இதில், மனநலம் பாதிக்கப்பட்ட மகளை வீட்டில் தனியாக விட்ட தம்பதி வெளியே சென்றிருந்தபோது, ஒரு மர்ம நபர் வீட்டுக்கு வந்தார்.
அங்கு முதலில் தண்ணீர் கேட்டு வந்த அவர், இளம்பெண் தண்ணீர் கொடுக்க மறுத்ததால், சில நேரம் கழித்து மீண்டும் வந்து வீட்டுக்குள் நுழைந்து, இளம்பெண்ணை பலாத்காரம் செய்தார்.

இதனால், அதிர்ச்சியடைந்த இளம்பெண் உடனே பெற்றோரிடம் உண்மையை தெரிவித்து கதறி அழுதார். அதன் பிறகு பெற்றோர் அரோஹள்ளி காவலில் புகாரளித்தனர்.
மேலும், காவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பெலகாவி மாவட்டம் கானாப்புராவை சேர்ந்த நவீன்ராவை கைது செய்தனர். இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Brutal attack on mentally challenged young woman Police officers arrested