பாஜக தில்லுமுல்லாக் கையாண்டால், தமிழ்நாடு அமைதியாக இருக்காது..அமைச்சர் .நேரு காட்டம்!
If BJP uses force Tamil Nadu will not remain peaceful..Minister says a veiled warning
நகராட்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, “பாஜகவின் நடவடிக்கைக்கு தேர்தல் ஆணையம் துணை போகிறதா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், பீகாரில் எஸ்.ஐ.ஆர். என்ற பெயரில் பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதும், அதில் இஸ்லாமியர்கள் மற்றும் பட்டியல் சமூகத்தினர் குறிவைக்கப்பட்டதும் பெரும் மோசடி எனக் கூறியுள்ளார்.மோடி அரசு அமைந்த பிறகு தன்னாட்சி அதிகாரங்கள் கொண்ட சி.பி.ஐ, ஆர்.பி.ஐ, சி.ஏ.ஜி, என்.ஐ.ஏ, வருமானவரித் துறை, அமலாக்கத் துறை, நிதி ஆயோக் அமைப்புகள் ஒன்றிய அரசின் கைப்பாவையாக மாறின. இந்த வரிசையில் தேர்தல் ஆணையமும் ஒன்றிய அரசின் கண் அசைவுக்கு ஏற்ப நடக்க ஆரம்பித்திருக்கிறது.
“மத்திய பாஜக அரசு, தமிழ்நாட்டிலும் இதே திட்டத்தை செயல்படுத்த முயன்றால், அதற்கு எதிராக தமிழ்நாடு ஒன்று சேர்ந்து போராடும்,” என அவர் எச்சரித்தார்.தேர்தல் ஆணையம், “வீடு வீடாகச் சென்று சரிபார்ப்பு” நடத்தப்படும் என்று தெளிவாகக் கூறியிருந்த போதிலும், வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்கள் வீடுகளுக்கு வரவே இல்லை என்று வாக்காளர்கள் Scroll செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்கள்.
அத்துடன், தேர்தல் ஆணையம் தனது நடுநிலையை இழந்து ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுவதாக அவர் குற்றம்சாட்டினார்.“ஜனநாயகத்தின் ஆணிவேரான தேர்தல் முறையை பாஜக தில்லுமுல்லாக் கையாண்டால், தமிழ்நாடு அமைதியாக இருக்காது,” என கே.என்.நேரு தெரிவித்தார்.
English Summary
If BJP uses force Tamil Nadu will not remain peaceful..Minister says a veiled warning