கரூர் சம்பவம் - பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் சென்று நிதியுதவி வழங்கிய செந்தில் பாலாஜி.!! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக இறந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் நிவாரண நிதியாக தமிழக அரசு அறிவித்து இருந்தது.

அதன் படி பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஏற்கனவே நிவாரண நிதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து நிவாரண நிதிக்கான காசோலை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த காசோலையை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார். முதற்கட்டமாக 45 நபர்களுக்கு குறிப்பாக பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் லேசான காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் நிதியையும் வீடு வீடாக சென்று வழங்கினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

sendhil balaji compensation provide to affested peoples in karoor incident


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->