ஜெகன் மோகன் ரோடு ஷோக்கு அதிகாரிகள் தடை விதிப்பு! -அமர்நாத் ரெட்டி சவால் ‘தடுக்க முடியாது' ...!
Officials ban Jagan Mohans road show Amarnath Reddy challenges cannot stopped
ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவருமான 'ஜெகன்மோகன் ரெட்டி', நாளை அனகாப்பள்ளி மாவட்டம் நர்சிப்பட்டினம் மக்கவர பாலத்தில் புதிய மருத்துவக் கல்லூரியை திறந்து வைக்க இருக்கிறார்.
இதற்காக அவர் விஜயவாடாவிலிருந்து விமானம் மூலம் விசாகப்பட்டினம் பயணம் செய்கிறார்.அவரை வரவேற்க பிரம்மாண்ட ரோடு ஷோ நடத்த கட்சி தொண்டர்கள் தயாராகி வருகின்றனர்.

ஆனால், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் போல் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிவித்து காவலர்கள் ரோடு ஷோவுக்கு தடை விதித்துள்ளனர்.இந்தத் தடை குறித்து கட்சியின் மாவட்ட தலைவர் மற்றும் முன்னாள் மந்திரி அமர்நாத் ரெட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது,"அரசு எத்தனை தடைகள் விதித்தாலும் ஜெகன் சாலைப் பயணம் நிற்காது.யார் எங்களை தடுக்கிறார்கள் என்று மக்கள் பார்ப்பார்கள்.காவலர்களிடம் அனுமதி கேட்டு கடிதம் தரவில்லை,வெறும் தகவலுக்காக மட்டும் அளித்தோம்"என்று தெரிவித்தார்.அவரின் இந்தக் கருத்து ஆந்திர அரசியல் வட்டாரத்தில் புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Officials ban Jagan Mohans road show Amarnath Reddy challenges cannot stopped