வீரர்களின் விழா தொடங்கியது! -உதயநிதி ஸ்டாலின் தீபம் ஏற்றி முதலமைச்சர் கோப்பை போட்டி துவக்கம்
players festival begun Udhayanidhi Stalin lights lamp and Chief Ministers Cup tournament begins
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) சார்பில் நடத்தப்படும் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள், உற்சாகத்திலும், எதிர்பார்ப்பிலும் நேற்று துவங்கின.இது கோவை, மதுரை, சென்னை, செங்கல்பட்டு உள்பட 13 நகரங்களில் நடைபெறும் இந்த பெருவிழாவில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுப்பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் மொத்தம் 30,000 வீரர், வீராங்கனைகள் தங்கள் திறமையை வெளிப்படுத்த உள்ளனர்.

இதன் அதிகாரபூர்வ தொடக்க விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் கண்கவர் தோற்றத்தில் நடைபெற்றது. மேலும் இந்த விழாவின் சிறப்பு நிமிடமாக, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு வழங்கப்படும் பிரமாண்ட கோப்பையை அறிமுகப்படுத்தினார்.
இந்த மாநில அளவிலான போட்டிகளின் தொடக்கத்தை குறிக்கும் வகையில் தீபம் ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.இந்த விருந்தில், அமைச்சர்கள் ரகுபதி, மாநில எம்.பி.க்கள் தயாநிதி மாறன், டாக்டர் கலாநிதி வீராசாமி,மா.சுப்பிரமணியன், துணைத் தலைவர் அசோக் சிகாமணி,கயல்விழி செல்வராஜ், சென்னை மேயர் பிரியா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, SDAT உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி, சேகர்பாபு, பாரா பேட்மிண்டன் வீரர் சுதர்சன், ரோலர் ஸ்கேட்டிங் வீராங்கனை கார்த்திகா உள்ளிட்ட பலர் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.
English Summary
players festival begun Udhayanidhi Stalin lights lamp and Chief Ministers Cup tournament begins