"இட்லி கடை" படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? - படக்குழு முக்கிய அறிவிப்பு.!!
idli kadai ott release update
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் தனுஷ் இயக்கத்தில் ‘உருவான இட்லி கடை’ படம் கடந்த ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தத் திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும், இந்தப் படத்தில் நித்யா மேனன், சத்யராஜ், பாக்யராஜ், ராஜ்கிரண், சமுத்திரக்கனி, அருண் விஜய் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர்.

டான் பிக்சர் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்தப் படம் வெளியான முதல் நாளில் இருந்தே நல்ல வசூல் குவித்து வருகிறது.
இருப்பினும், திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வரும் "இட்லி கடை" படத்தின் ஓடிடி ரிலீஸை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டுள்ளனர். இந்த நிலையில், "இட்லி கடை" படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த மாதம் இறுதி வாரத்தில் அல்லது நவம்பர் மாதம் முதல் வாரத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
idli kadai ott release update