காந்தாராவை முன் இத்தனை சூப்பர் ஹிட் படங்களை இயக்கி இருக்கிறாரா ரிஷப் ஷெட்டி..? ரிஷப் ஷெட்டியின் ஹிட் படங்கள் பட்டியல்! - Seithipunal
Seithipunal


காந்தாரா சாப்டர் 1 படம் திரையரங்குகளில் அதிரடி வெற்றி பெற்று வருகிறது. இந்த வெற்றியின் பின்னணியில் நிற்கும் இயக்குனர், நடிகர், கதாசிரியர் ரிஷப் ஷெட்டி, கன்னட சினிமாவுக்கு புதிய உயரத்தை கொண்டு வந்தவர்.இப்போது, அவர் இயக்கிய ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஹிட் படங்களை வளையொலி பாணியில் பார்ப்போம். 

ரிக்கி (2016)
ரிஷப் ஷெட்டி இயக்கிய முதல் படம்.

ஹீரோ: ரக்‌ஷித் ஷெட்டி

ஹீரோயின்: ஹரிப்பிரியா

கதை: ஒரு சாதாரண பெண் நக்சலைட்டாக மாறும் பரபரப்பான க்ரைம் த்ரில்லர். காதலுக்காக காதலன் எடுக்கும் சவாலான முடிவுகளைச் சொல்கிறது.
தற்போது Sun NXT-ல் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.

கிரிக் பார்ட்டி (2017)
கல்லூரி வாழ்க்கையை நகைச்சுவை, காதல், ஆக்‌ஷன் கலந்த கதையுடன் காட்டிய படம்.

ஹீரோ: ரக்‌ஷித் ஷெட்டி

ஹீரோயின்: ராஷ்மிகா மந்தனா (இப்படத்தின் மூலம் அறிமுகம்)
 இளைய தலைமுறையினரால் பெரிதும் ரசிக்கப்பட்ட சூப்பர் ஹிட் படம்.
 தற்போது JioCinema / Hotstar-ல் ஸ்ட்ரீம் ஆகிறது.

சர்க்காரி ஹிரிய பிராத்தமிக ஷாலே, காசர்கோடு (2018)
எல்லையோரப் பகுதிகளில் உள்ள கன்னடப் பள்ளிகளின் பிரச்சனையை எடுத்துக்கூறும் சமூக உணர்வுப்பூர்வமான படம்.

காதல், நகைச்சுவை, கன்னட மொழிக்காக போராடும் உணர்வுகள் அனைத்தும் கலந்த கதை.
தேசிய விருது பெற்ற படம்.
தற்போது Sun NXT-ல் ஸ்ட்ரீம் ஆகிறது.

காந்தாரா (2022)
ரிஷப் ஷெட்டி இயக்கியும், ஹீரோவாகவும் நடித்த பிளாக்பஸ்டர்.

ஹீரோயின்: சப்தமி கவுடா

துளுநாட்டின் தெய்வ வழிபாடு, பழங்குடி மக்களின் வாழ்க்கை, பெரிய குடும்பங்களின் சுரண்டலை மையமாகக் கொண்ட கதை.
வெறும் ₹16 கோடி பட்ஜெட்டில் உருவான படம்,
உலகளவில் ₹400 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
தேசிய விருது பெற்ற படம்.
தற்போது Amazon Prime மற்றும் Netflix-ல் ஸ்ட்ரீம் ஆகிறது.

காந்தாரா சாப்டர் 1 (2025)
படம் வெளியாகி ஐந்து நாட்களே ஆன நிலையில்,

பாக்ஸ் ஆபிஸில் அதிரடி வசூல்,

வெளிநாடுகளிலும் பாராட்டுகள்,

ஒளிப்பதிவு, VFX, பின்னணி இசை, நடிப்பு அனைத்தும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

“ரிஷப் ஷெட்டி இயக்கிய படங்கள் வெறும் பொழுதுபோக்கல்ல… பாரம்பரியம், உணர்வு, கதையின் ஆழம் அனைத்தையும் மக்களுக்கு கொண்டு சேர்த்துள்ளன.‘ரிக்கி’ முதல் ‘காந்தாரா சாப்டர் 1’ வரை – ஒவ்வொரு படமும் தனித்துவமான அனுபவம்.
ரசிகர்கள் மிஸ் பண்ணக் கூடாத க்ளாசிக் படங்கள் இவை!”

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Has Rishabh Shetty directed so many super hit films before Gandhara List of Rishabh Shetty hit films


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->