பீகார் தேர்தல் களத்தில் அரசியல் சூடு! -மத்திய காங்கிரஸ் குழு அவசர ஆலோசனை!
Politics heats up Bihar election arena Central Congress Committee holds urgent meeting
கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு வலுவான ஆதரவாக இருந்த பீகார் மாநிலத்தின் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் (JDU), மத்திய அரசின் பெரும் சலுகைகள் மற்றும் புதிய திட்டங்களால் தற்போது மீண்டும் அரசியல் சர்ச்சையில் மாட்டியுள்ளது.இதில் எதிர்க்கட்சிகள், “இந்த திட்டங்கள் அனைத்தும் பீகார் சட்டசபை தேர்தலை நோக்கி வாக்குகளை கவரும் தந்திரம்” என கடுமையாக குற்றஞ்சாட்டுகின்றன.
இந்த தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தப்பணிகளை மேற்கொண்டது. ஆனால் அதில் லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகி, மாநிலம் முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்தன.

மேலும், நாடாளுமன்றத்திலும் இதே விவகாரம் பெரும் விவாதமாக எழுந்தது.இந்நிலையில், பீகார் மாநில சட்டசபைத் தேர்தல் அட்டவணை நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. மாநிலத்தின் மொத்தம் 243 தொகுதிகளுக்கான தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறவுள்ளது.
முதல் கட்டம்: 121 தொகுதிகள் – அடுத்த மாதம் 6ம் தேதி
இரண்டாம் கட்டம்: 122 தொகுதிகள் – அடுத்த மாதம் 11ம் தேதி
வாக்கு எண்ணிக்கை – அடுத்த மாதம் 14ம் தேதி
தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு இன்று டெல்லியில் கூடுகிறது.
கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெறும் இந்த முக்கிய கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் திருத்த விவகாரம், கள நிலவரம், தேர்தல் பிரசாரம், மற்றும் வேட்பாளர் தேர்வு போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.இதில் மாநில மற்றும் மத்திய நிர்வாகிகள், மூத்த தலைவர்கள் பலரும் பங்கேற்க உள்ளனர்.
English Summary
Politics heats up Bihar election arena Central Congress Committee holds urgent meeting