வாக்கு திருட்டுக்கு எதிர்ப்பு தெரிவிப்பு..காங்கிரஸ் கட்சி சார்பாக கையேழுத்து இயக்கம்! - Seithipunal
Seithipunal


மத்திய அரசு, இந்திய தேர்தல் ஆணையத்துடன் இணைந்து வாக்கு திருட்டில் ஈடுபடுவதை கண்டித்து, ராஜிவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் சார்பில் கோவை புலியகுளம் பகுதியில் மாபெரும் கையேழுத்து இயக்கம் நடைபெற்றது...

மத்தியில் ஆளக்கூடிய பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசு, இந்திய தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பல்வேறு மாநிலங்களில் வாக்கு திருட்டுக்களை நடத்தி வருகின்றது. இதனை காங்கிரஸ் கட்சியின் சார்பாக ராகுல் காந்தி கண்டு பிடித்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றார். இதற்கு வலு சேர்க்கும் வகையில் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், இதனை கண்டித்தும் காங்கிரஸ் கட்சி சார்பாக கையேழுத்து இயக்கம் கோவை புலியகுளம் பகுதியில் நடைபெற்றது. 

ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் மாநகர் மாவட்டத் தலைவர் எம்.எஸ் பார்த்திபன் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சியில், சர்க்கிள் தலைவர் கணேசன், மண்டல தலைவர் மோகன்ராஜ், அமுல்ராஜ், ஜெர்ரி லூயிஸ், ராகவன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக மாநகர் மாவட்டத் தலைவர் விஜயகுமார், ஐஎன்டியூசி மாநில பொதுச் செயலாளர் கோவை செல்வன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் மதி சோபனா செல்வன், மாவட்ட காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் வி எம் சி மனோகரன், ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களிடம் கையெழுத்துகளை பெற்றனர். 
மேலும் இந்த நிகழ்ச்சியில் ஜனார்த்தனன், குணசேகரன், சண்முகம், கள்ளுமடை பாலசந்திரன், ராஜமாணிக்கம், சஞ்சய் கார்த்திக், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கொடியினை பிடித்த வாறு ஊர்வலமாக வந்து சுமார் 1000 த்திற்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் கையேழுத்துக்களை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Protest against vote rigging Signature campaign on behalf of the Congress party


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->