வானிலை அறிக்கை.. இன்று பணமழை.. ஆனால் 3 வருடத்திற்கு வறட்சி.. வைரலாகும் புகைப்படம்..!! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது. இதன் காரணமாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதுமட்டுமின்றி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களை கண்ணும் கருத்துமாக அனைத்து அரசியல் கட்சிகளும் கவனிக்க தொடங்கிவிட்டன.

தினமும் காலை முதல் மாலை வரை மூன்று வேளையும் கறி விருந்து, தினமும் ரூபாய் 500 என சகல வசதிகளையும் அரசியல் கட்சிகள் செய்து வருகின்றன. ஆண்களுக்கு என பிரத்தியேகமாக மதுபானங்கள் வழங்கப்படுகிறது.

அதேபோன்று வாக்காளர்களுக்கு பட்டுப்புடவை, வெள்ளி கொலுசு, காமாட்சி விளக்கு, ஸ்மார்ட் வாட்ச், குக்கர் என பல பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று திமுக சார்பில் வீடு தோறும் ஐந்து கிலோ அரிசி மூட்டையும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஆட்டோ பின்னால் எழுதப்பட்ட வாசகத்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் மக்கள் நலனில் மாநகர் செய்தி துளிகள் : ஈரோடு வானிலை அறிக்கை! 

எங்கு பார்த்தாலும் சூறாவளி! அனைத்து புயல்களும் மையம்; வரலாறு காணாத பண மழையில் நனையும் வாக்காளர்கள்! மனமகிழ்ச்சி! அதன்பின் மூன்று வருடத்திற்கு வறட்சி நிலவும்!" என எழுதப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Auto photo of money to voters in Erode East has viral


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->