இளைஞர்களே ரெடியா.. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 5ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து ஆகஸ்ட் 5ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது. தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 100 சிறப்பு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களை தமிழ்நாடு முழுவதும் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள படித்து வேலை வாய்ப்பின்றி உள்ள இளைஞர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான பணியாளர்களை நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்ய உள்ளனர். இந்த வேலை வாய்ப்பு முகாமில் 10ம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப் படிப்பு படித்தவர்கள் வரை கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள வயது வரம்பாக 18 வயது முதல் 35 வயது வரை உள்ள நபர்கள் கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் நபர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் ஆகஸ்ட் 5ஆம் தேதி காலை 9 மணிக்கு காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரி வளகத்தில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் விபரங்களுக்கு 044-27237124 என்ற தொலைபேசி எண் வாயிலாக தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

August 5 mega employment camp in kanchipuram district


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->