தர்மபுரியில் அதிர்ச்சி.. கனிமவள கொள்ளையை தடுத்த வி.ஏ.ஓ.. டிராக்டர் ஏற்றி கொல்ல முயற்சி..!! - Seithipunal
Seithipunal


தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டி அருகே கனிமவளம் கொள்ளையை தடுக்கச் சென்ற கிராம நிர்வாக அலுவலரை டிராக்டர் ஏற்றிக் கொல்ல முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் மெணசி கிராமத்தில் இளங்கோ என்பவர் நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். மெணசி பகுதியில் சிலர் கனிமவளக் கொள்ளையில் ஈடுபடுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு இளங்கோ விரைந்து சென்றுள்ளார்.

அப்போது குண்டல் மடுவு காளியம்மன் கோவில் அருகே உளி கற்களை ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று அதிவேகமாக சென்றுள்ளது. அந்த டிராக்டரை கிராம நிர்வாக அலுவலர் இளங்கோ தடுக்க முயற்சித்த போது அவரை ஏற்றிக் கொலை செய்யும் நோக்கில் டிராக்டர் நிற்காமல் சென்றது.

இந்த சம்பவத்தில் கிராம நிர்வாக அலுவலர் இளங்கோ அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் இளங்கோ பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் டிராக்டர் உரிமையாளர் ராகவன் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பாப்பிரெட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழக முழுவதும் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் மீது தாக்குதல் சம்பவம் அரங்கேறி வருகிறது. கடந்த வாரம் தூத்துக்குடி மாவட்டத்தில் லூர்து பிரான்சிஸ் என்ற கிராம நிர்வாக அலுவலர் அவருடைய அலுவலகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சில நாட்களுக்கு முன்பு சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கிராம அலுவலர் மணல் கொள்ளையர்களால் கொலை முயற்சிக்கு ஆளான நிலையில் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். 

இந்த நிலையில் தமிழ்நாடு கிராம அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் நேர்மையாக செயல்படும் அரசு அதிகாரிகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்க வேண்டும் எனவும், தேவைப்படும் பட்சத்தில் கைத்துப்பாக்கி வழங்க பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்த நிலையில் தர்மபுரியில் மேலும் ஒரு கிராம அலுவலரை  கொலை செய்ய முயற்சித்துள்ள சம்பவம் அரசு அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Attempt murder on VAO in Dharmapuri by tractor


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->