நாங்குநேரியை தொடர்ந்து திருவாரூரிலும்.!! பட்டியலின முதியோர் மீது கொடூர தாக்குதல்.!!
Attack on scheduled caste old man in Thiruvarur
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பட்டியலின பள்ளி மாணவன் மற்றும் அவருடைய தங்கை மீது அதே பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சாதி ரீதியில் வீடு புகுந்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே பட்டியலின முதியவரை சாதி ரீதியில் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் வடவேர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்த நிலையில் பட்டியலின மக்கள் வசிக்கும் தெரு வழியாக இறுதி ஊர்வலம் நடந்துள்ளது.

அப்போது இறுதி ஊர்வலத்தில் மலர்களை தூவிய படி சென்ற இளைஞர்கள் ஐந்து பேர் பட்டியலின சிறுவர்கள் மீது மலர்களை தூவியதோடு அவர்களை ஆபாசமாக திட்டி உள்ளனர். இதனை தட்டிக் கேட்ட இளைஞர்களையும் அவர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்தான விசாரணைக்காக காவல் நிலையம் சென்று திரும்பிய பட்டியலினத்தை சேர்ந்த முதியவரை தினேஷ் குமார் மற்றும் வினோத்குமார் ஆகிய இளைஞர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு சாதி பெயரில் கூறி தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக இரு இளைஞர்கள் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் வினோத் குமார் என்ற இளைஞரை மட்டும் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்றொருவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பதட்டமான சூழலை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Attack on scheduled caste old man in Thiruvarur