குறவர் வேறு நரிக்குறவர் வேறு! போராட்டம் நடத்தியவர் மீது தாக்குதல்! - Seithipunal
Seithipunal


நரிக்குறவர் என்ற சாதி பெயரில் உள்ள குறவர் பெயரை நீக்க நீக்கக்கோரி போராட்டம்!

நரிக்குறவர் வாரியம் என்ற பெயரில் இருக்கும் குறவர் என்ற பெயரை நீக்க கோரி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்தப் போராட்டத்தின் போது போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த ஒருவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த குறவர் இன பெண்கள் தேனி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சாலை மறியல் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் குண்டுகட்டாக துக்கி சென்று கைது செய்தனர். 

நியாயமான முறையில் அறவழியில் போராட்டம் நடத்திய எங்கள் மீது போலீசார் அடக்கு முறையை ஏவி விட்டு தடியடி நடத்தியதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சமீபத்தில் நரிக்குறவர்களை மத்திய அரசு இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலிருந்து பட்டியல் இன பிரிவில் மாற்றியது குறிப்பிடத்தக்கது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Attack on protesting people


கருத்துக் கணிப்பு

மக்கள் வரிப்பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு, மக்களையே ஓசில போறிங்க என்று அசிங்கப்படுத்தும் திமுக அமைச்சரின் பேச்சு?Advertisement

கருத்துக் கணிப்பு

மக்கள் வரிப்பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு, மக்களையே ஓசில போறிங்க என்று அசிங்கப்படுத்தும் திமுக அமைச்சரின் பேச்சு?
Seithipunal