மூன்று தலைமுறை கனவு! மகிழ்ச்சியில் தமிழகத்தின் மூன்று மாவட்டம்! - Seithipunal
Seithipunal


கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களின் மூன்று தலைமுறை கனவு திட்டமான அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் தொடக்க விழா இன்று நடந்துள்ளது.

இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று, ஈரோடு மாவட்டம் பவானி காலிங்கராயன் அணைக்கட்டு அருகில் அமைக்கப்பட்டுள்ள முதலாவது நீரேற்று நிலையத்தில் இருந்து அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

விவசாயிகள், பொதுமக்கள், சமூக-இயற்கை ஆர்வலர்கள், அதிமுக, திமுக, பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் நீண்ட நெடிய போராட்டத்தின் பலனாக இன்று அத்திக்கடவு-அவினாசி திட்டம் இன்று தொடங்கபட்டுள்ளது.

இத்திட்டத்தினைச் செயல்படுத்துவதன் மூலம் பவானி ஆற்றில் காளிங்கராயன் அணைக்கட்டின் கீழ்ப்புறத்திலிருந்து ஆண்டொன்றிற்கு 1.50 டி.எம்.சி உபரி நீரை வினாடிக்கு 250 கன அடி வீதம் 70 நாட்களுக்கு நீரேற்று முறையில், 1065 கி.மீ. நீளத்திற்கு நிலத்தடியில் குழாய்ப் பதிப்பின் மூலம் ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 24,468 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் வகையில் நீர்வளத்துறையின் 32 ஏரிகள், ஊராட்சி ஒன்றியத்தின் 42 ஏரிகள் மற்றும் 971 குளம் குட்டைகள், என மொத்தம் 1045 எண்ணிக்கையிலான ஏரிகள், குளம், குட்டைகளில் நீர் நிரப்பப்படும்.

திட்டம் தொடங்கப்பட்டுள்ளதால் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக அவினாசியில் விவசாயிகள், பொதுமக்கள், போராட்டக்குழுவினர் இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

திட்டம் தொடங்கப்பட்டுள்ளது குறித்து விவசாயிகள் தெரிவிக்கையில், 60 ஆண்டு கால கனவு திட்டம் நிறைவேறியுள்ளது. இதற்காக எவ்வளவோ போராட்டங்களை நடத்தி உள்ளோம். 

அனைத்து கட்சியினரும் இந்த திட்டம் நிறைவேற ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர். போராட்டம் நடத்தியுள்ளனர். இந்தத்திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகளையும் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Athikadavu Avinashi Project farmers happy


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->