அல்லாவும் - ஐய்யனாரும் ஒன்னு, "மார்க்கம் மாறி இருக்கு, மண்ணு மாறல" தெறிக்கவிடும் வசனங்கள்! - Seithipunal
Seithipunal


நடிகர் ஆர்யாவின் நடிப்பில், இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்'.

இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். ட்ரம் ஸ்டிக் புரொடக்ஷன் மற்றும் ஜி ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது. 

இந்த படத்தின் டீசர் கடந்த மார்ச் 31ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இன்று படத்தில் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ட்ரைலர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் மத அடிப்படைவாதிகளுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் படத்தின் கரு இருக்கும் என்று தெரிகிறது.

மேலும், சாதியை வைத்து படம் எடுக்கும் பா ரஞ்சித், வெற்றிமாறன், மாரிதாஸ் போன்ற இயக்குனர்களை போலவே, முத்தையாவின் இந்த படத்தின் ட்ரைலரில் லேசான சாதியம் இருக்கும் என்பதை உணர்த்துகிறது.

பாராட்டும் படியாகவும், கவனத்தை ஈர்க்கும் வகையிலும் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தின் சில வசனங்கள் இடம்பெற்றுள்ளன. அதில், 

அரியும் - சிவனும் ஒன்னு. அது அறியாதவன் வாயில் மண்ணுங்கிறது இப்போ தேவையில்லை

அல்லாவும் - ஐய்யனாரும் ஒன்னு. அது அறியாதவன் வாயில் மண்ணுங்கிறது தான் இப்போ தேவை

"மார்க்கம் தான் மாறி இருக்கு, மண்ணு மாறல" போன்ற வசனங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Arya in katharpatsha enkira muthuramalingam movie trailer Dialog viral


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->