'தவெகவிற்கு ஓ.பன்னீர்செல்வம் வருவது தான் நல்ல முடிவு'; ஜே.சி.டி. பிரபாகர்..!
JCD Prabhakar says that O Panneerselvam joining the TVK is the right decision
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்கவுள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. விஜய்யின் தவெக கட்சி முதன்முறையாக தேர்தலை சந்திக்க உள்ளது. தவெகவில் இளைஞர்கள் மட்டுமே இருக்கின்றனர். போதுமான அனுபவம் வாய்ந்தவர்கள் இல்லை என்று தொடர் விமர்சனங்களை சந்தித்து வந்த தவெக கட்சிக்கு, கரூர் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு பெரிதும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ளமை அக்கட்சிக்கு பக்க பலமாக பார்க்கப்படுகிறது.
இவரை தொடர்ந்து, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தை தவெகவிற்கு கொண்டு வரலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். ஆனால், பன்னீர் செல்வத்துக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியே முதல் தேர்வாக இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது அதிமுகவில் பன்னீர் செல்வத்துக்கு இடமில்லை என்பதை எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில், அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ-வும், ஓ. பன்னீர் செல்வம் ஆதரவாளர்களாகவும் இருந்த ஜே.சி.டி. பிரபாகர், கடந்த ஜனவரி மாதம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை சந்தித்து, தவெகவில் இணைத்துக் கொண்டார். அவரை தொடர்ந்து, முன்னாள் அமைச்சரும் ஓ. பன்னீர் செல்வத்தின் ஆதரவாளராகவும் இருந்து கு.ப.கிருஷ்ணனும் தவெகவில் இணைத்துக்கொண்டார். இது, ஓபிஎஸ்-க்கு பலம் குறைந்து வருவதாக பார்க்கப்படுகிறது.
அண்மையில் தவெகவில் இணைந்த ஜேசிடி பிரபாகர் இன்று பிரபல செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
''தவெகவிற்கு ஓ.பன்னீர்செல்வம் வருவது தான் நல்ல முடிவு என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. ஓ.பன்னீர்செல்வம் விரைவில் நல்ல முடிவெடுப்பார். விரல் நுனியில் விவரங்களை கொண்டவர் விஜய். அவர் எங்களை விட அனுபவம் பெற்றவர். அவரின் கீழ் பணியாற்றுவது பெருமையாக உள்ளது. தமிழகம் மாற்றத்தை நோக்கி விரைவாக பயணித்து கொண்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.
English Summary
JCD Prabhakar says that O Panneerselvam joining the TVK is the right decision