டி20 கிரிக்கெட்: அதிக அரை சதம்; விராட் கோலியை பின்னுக்கு தள்ளி பாபர் அசாம் முதலிடம்..!
Babar Azam surpasses Virat Kohli to take the top spot for scoring the most half centuries in T20 cricket
ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தாகுக்கு சுற்றுப்பயணம் செய்து 03 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் 02 டி20 போட்டிகளிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்று தொடரை தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.
இரு அணிகளுக்கு இடையிலான -3-வது டி20 போட்டி இன்று லாகூரில் நடைபெற்றது. போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில், பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் 20 ஓவரில் 06 விக்கெட்டுக்கு 207 ரன்கள் எடுத்தது. அணியின் சார்பாக சைம் அயூப் 56 ரன்னும், பாபர் அசாம் 36 பந்தில் 50 ரன்னும் அடித்தனர். ஷதாப் கான் 19 பந்துகளில் 46 ரன்கள் குவித்தார்.

208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியாஅணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதிகபட்சமாக ஸ்டாய்னிஸ் 23 ரன்களும், கேமரூன் கிரீன் 22 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில், ஆஸ்திரேலிய அணி 16.5 ஓவரில் 96 ரன்களுக்கு சகல விக்கெட்டுகளை இழந்தது இதன்மூலம் 111 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றிப்பெற்றது. இதையடுத்து, டி20 தொடரை 3-0 என கைப்பற்றியுள்ளது.
இப்போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக அரைசதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் விராட் கோலியின் சாதனையை பாபர் அசாம் முறியடித்துள்ளார். விராட் கோலி 38 அரைசதங்கள் அடித்துள்ள நிலையில் பாபர் அசாம் 39 அரைசதம் அடித்து இந்த சாதனையை படைத்துள்ளார். இந்த பட்டியலில் கோலிக்கு அடுத்தபடியாக ரோஹித் (32), ரிஸ்வான் (30) ஆகியோர் உள்ளனர்.
English Summary
Babar Azam surpasses Virat Kohli to take the top spot for scoring the most half centuries in T20 cricket