டி20 உலகக் கோப்பை 2026; 'இந்தியாவுடன் மட்டும் விளையாட மாட்டோம்'; பாகிஸ்தான் அரசாங்கம் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


 டி20 உலகக் கோப்பை 2026 இந்தியா மற்றும் இலங்கையில் வருகிற 7-ந்தேதி தொடங்குகிறது. 20 அணிகள் பங்கேற்கும் தொடர்  பாகிஸ்தான் மோதும் போட்டிகள் அனைத்தும் இலங்கையில் நடைபெற உள்ளன. 

வங்கதேச அணி தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. அதாவது அந்நாட்டில், இந்து சிறுபான்மையினர் தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் தொடர் கதையாகியுள்ளது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இருநாடுகளுக்கும் இடையிலான உறவு மோசடைந்துள்ளது. இதனையடுத்து பல எதிர்ப்புகளுக்கு மத்தியில், ஐ.பி.எல் தொடரில், கே.கே.ஆர். அணியில் இருந்து வங்கதேச வீரர் முஸ்தபிஜுர் ரஹ்மான் நீக்கப்பட்டார்.

இதனால் பாதுகாப்பு காரணமாக, இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க முடியாது, நாங்கள் விளையாடும் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தது. ஆனால், ஐசிசி அதனை நிராகரித்துள்ள நிலையில், வங்கதேச அணி, உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. இந்த அணிக்கு பதிலாக ஸ்காட்லாந்து அணிக்கு டி20 உலகக்கோப்பையில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. 

இந்நிலையில் வங்கதேச அணிக்கு ஆரம்பம் முதலே பாகிஸ்தான் அணி ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், டி20 உலகக் கோப்பையில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி டி20 உலக கோப்பையில் விளையாட பாகிஸ்தான் அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. இருப்பினும், பிப்ரவரி 15 ஆம் தேதி இந்தியாவுக்கு எதிராக நடைபெறவிருக்கும் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பங்கேற்காது என்று பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pakistan announces it will not play against India in the T20 World Cup


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->