Under 19 உலக கோப்பை; பரம எதிரி பாகிஸ்தானை 58 ரன்களில் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா..!
India defeated Pakistan by 58 runs in the Under 19 World Cup match and entered the semi finals
19 வயதிற்குட்பட்டோர் ஆண்களுக்கான உலக கோப்பை அரையிறுதி போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. 19 வயதுக்கு உட்பட்டவருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இதில் 16 நாடுகள் பங்கேற்றுள்ள நிலையில், அணிகள் 04 பிரிவாக பிரிக்கப்பட்டன.
கடந்த 23-ஆம் தேதி லீக் ஆட்டங்கள் முடிந்த நிலையில், இதன் முடிவில் ஜப்பான், அமெரிக்கா, ஸ்காட்லாந்து, தான்சானியா ஆகிய 04 நாடுகள் வெளியேற்றப்பட்டன.
12 அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு தகுதி பெற்றன. அவையும் 02 பிரிவாக பிரிக்கப்பட்டன. அதில், குரூப் 01 பிரிவில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, அயர்லாந்து ஆகிய அணிகளும், குரூப் 02 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, வங்காளதேசம், நியூசிலாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணிகளும் இடம் பெற்றன. குரூப் 01 பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா முதல் இடத்தையும், ஆப்கானிஸ்தான் 02-வது இடத்தையும் பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

குரூப் 02 பிரிவில் இங்கிலாந்து 8 புள்ளிகள் பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. 02-வது அணி அணிக்கான ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று விளையாடியது. அதனபடி, போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில், பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 252 ரன்கள் எடுத்தது. குறிப்பாக தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். இந்திய அணி தரப்பில் தினமாக ஆடிய வேதாந்த் திரிவேதி 68 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது சய்யாம், அப்துல் சுப்ஹான் ஆகியோர் தலா 03 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து 253 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தது. இதில், ஹம்சா ஜஹூர் 42 ரன்னிலும் உஸ்மான் கான் 66 ரன்னிலும் கேப்டன் ஃபர்ஹான் யூசுப் 38 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்ததாக வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க 46.2 ஓவர்களில் 194 ரன்களுக்கு பாகிஸ்தான் அணி சகல விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து பரம எதிரியான பாகிஸ்தானை 58 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 08 புள்ளிகளுடன், அரையிறுதிக்குள் நுழைந்தது. பாகிஸ்தான் அணி தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
இந்திய அணி சார்பாக, அண்ணியின் கேப்டன் ஆயுஷ் மாத்ரே மற்றும் கிளன் படேல் தலா 03 விக்கெட்டினை கைப்பற்றினர்.
English Summary
India defeated Pakistan by 58 runs in the Under 19 World Cup match and entered the semi finals