சிதம்பரம் நடராஜர் கோவில் : கோலாகலமாக நடைபெறும் ஆருத்ரா தரிசன தேரோட்டம்.!  - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாகவும், உலக புகழ்பெற்ற தலமாகவும் விளங்கும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் வருடந்தோறும் ஆறு மகா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். 

அதில் குறிப்பாக மார்கழி மற்றும் ஆனி மாதம் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழா மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். ஏனென்றால், இந்த இரண்டு  உற்சவத்தின் போதும் மூலவராகிய ஆனந்த நடராஜமூர்த்தி, சிவகாம சுந்தரி அம்பாளுடன் உற்சவராக தேரில் எழுந்தருளி வீதியில் உலா வருவார். 

இந்த நிகழ்ச்சியில் சிதம்பரம் மட்டுமல்லாமல், சுற்றுவட்டாரங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். அதன்படி, இந்தாண்டுக்கான மார்கழி மாத ஆருத்ரா தரிசன திருவிழா கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. 

இதனை முன்னிட்டு தினமும் காலை மற்றும் மாலை பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும், கடந்த 1-ந்தேதி தெருவடைச்சான் உற்சவமும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 

இந்த விழாவின் மிக முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை 5 மணிக்கு தொடங்கியது. இந்த தேரில், நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட ஐந்து சாமிகளின் எழுந்தருத்து வீதிகளில் உலா வருகிறது. 

இந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, சிவன் அருளை பெறுவதற்கு கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்து செல்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

arudhra dhrshana therottam in chithambaram nadarajar temple


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->