லைஃப தொலைச்சிட்டியே தம்பி... கோலிக்காக கொலை செய்த அரியலூர் இளைஞருக்கு ஆயுள் தண்டனை!
Ariyalur Virat Friend murder case
இந்திய கிரிக்கெட் அணிக்கு நாடு முழுவதும் எண்ணற்ற ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் போன்ற நட்சத்திர வீரர்களுக்காக பல்வேறு இடங்களில் ரசிகர் மன்றங்களும் செயல்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் போது, அணிகளின் ரசிகர்களிடையே வாக்குவாதங்கள், சண்டைகள் நிகழ்வது சாதாரணமாகி விட்டது.
இந்நிலையில், 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனின் போது அரியலூரை சேர்ந்த தர்மராஜ், தனது நண்பர் விக்னேஷுடன் ஊருக்கு வெளியே சென்று மதுபானம் அருந்தியுள்ளார். இருவரும் மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் பேசிக்கொண்டிருக்கும்போது கிரிக்கெட் தொடர்பான விவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த வாக்குவாதத்தின் போது, விக்னேஷ் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை தவறாக பேசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தர்மராஜ், அருகிலிருந்த அரிவாளால் தாக்கியதில், விக்னேஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு போலீசார் வழக்குப் பதிவு செய்து, தர்மராஜை கைது செய்தனர். தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்றது.
இன்று அரியலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததில், விக்னேஷை கொலை செய்த குற்றச்சாட்டில் தர்மராஜ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
English Summary
Ariyalur Virat Friend murder case