பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு: உண்ணாவிரத போராட்டத்திற்கு நாள் குறித்த கிராமமக்கள்.! எப்போது தெரியுமா? - Seithipunal
Seithipunal


சென்னையின் 2 வது விமான நிலையம் காஞ்சிபுரம், பரந்தூரில் அமைய உள்ளது. விமான நிலையம் அமைக்க தேவையான நிலம் பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களில் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதால் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். 

ஏகனாபுரம் கிராம மக்கள் பரந்தூர் விமான நிலையம் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர் அவர்களது போராட்டம் இன்று 705 வது நாளாக நீட்டித்துள்ளது. 

இந்நிலையில் இன்று சிறப்பு கிராம சபை கூட்டம் ஏகனாபுரம் தவிர ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் உள்ள 57 ஊராட்சிகளிலும் நடைபெற்றது. இதன் மூலம் கிராம சபை கூட்டம் நடத்த வராமல் அதிகாரிகள் புறக்கணித்ததாக தெரிவிக்கப்பட்டதால் ஏகனாபுரம் கிராம மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். 

இதனை தொடர்ந்து பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினர் வருகின்ற 3 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏகனாபுரம் கிராம மக்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேறி ஆந்திரா, சித்தூர் மாவட்ட ஆட்சியரை சந்திக்க போவதாக அறிவித்திருந்த போராட்டம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Anti Paranthur airport group hungerstrike issue


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->