#BREAKING || ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை..!!
Anti corruption department raids IAS officer malarvizhi house
சென்னை அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக இருக்கும் ஐஏஎஸ் அதிகாரி மலர்விழியின் சென்னை விருகம்பாக்கம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2017 ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்ட ஆட்சியராக மலர்விழி ஐஏஎஸ் பணியாற்றி வந்தார். கடந்த 2020-2021 ஆம் ஆண்டு காலகட்டத்தில் கொள்முதலில் ஊழல் நடைபெற்ற உள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Anti corruption department raids IAS officer malarvizhi house