எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் அமர வைக்க வேண்டியது நமது பொறுப்பு - அண்ணாமலை அதிரடி.!
annamalai speech in bjp booth committee meeting
திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் பகுதியில் பா.ஜ.க. சார்பில் இன்று முதல் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் அமித் ஷா கலந்து கொண்டார். மேலும், இந்த மாநாட்டில் பாஜக மாநில மற்றும் தேசிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில், பூத் கமிட்டி மாநாட்டில் கலந்து கொண்ட முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:- எடப்பாடி பழனிசாமியை தமிழக முதல்வராக்குவது பாஜகவின் கடமை.

எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் அமர வைக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை கொண்டுவர வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு தமிழக அரசுக்கு பெருமை சேர்த்து வருகிறது" என்றுத் தெரிவித்தார்.
English Summary
annamalai speech in bjp booth committee meeting