#BREAKING : அரியலூர் மருத்துவக்கல்லூரி அரங்கிற்கு அனிதா பெயர்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி புதிய அரங்கிற்கு அனிதா பெயர் வைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் அமைந்துள்ள அரங்குக்கு நீட் தேர்வுக்கு எதிராக போராடி உயிரிழந்த மாணவி அனிதாவின் பெயர் சூட்டப்படும் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற அடிப்படையில் அரியலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரியில், ரூ.22 கோடி செலவில் ஒரே நேரத்தில் 250 பேர் அமரக்கூடிய வகையில் புதிய அரங்கு கட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த புதிய அரங்குக்கு மாணவி அனிதா பெயர் சூட்டப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Anita named for Ariyalur Medical College Hall


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->