திடீர்திருப்பம் | முடிவை மாற்றிய டிடிவி தினகரன்! வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயற்குழு கூட்டம் வருகின்ற ஜூன் 7ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென தேதி மாற்றப்பட்டு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்  அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.

இதுகுறித்த அவரின் அந்த அறிவிப்பில், "இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மக்கள் நலக்கொள்கைகளைத் தொடர்ந்து நிலைநாட்டிட போராடி வரும் நமது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு கூட்டம் வருகின்ற ஜூன் 20ஆம் தேதி, செவ்வாயக் கிழமை, காலை 09.00 மணி அளவில், சென்னை, ராயப்பேட்டையிலுள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெறும்.

அனைத்து கழக செயற்குழு உறுப்பினர்களும் அழைப்பிதழோடு தவறாமல் வந்து கலந்து கொள்ள வேண்டுமென
தங்களுக்கான கேட்டுக்கொள்கிறேன்" என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அக்கட்சியின் துணைத்தலைவர் S.அன்பழகன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) தலைமையில் இந்த செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


அதிமுகவில் ஏற்பட்ட பல்வேறு குழப்பங்களுக்கு பிறகு, தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஒருங்கிணைந்து செயல்பட தொடங்கியுள்ள அதே நேரத்தில், ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் உடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளார்.

டிடிவி தினகரன் இதற்க்கு சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல், அதிமுகவை மீட்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து உள்ள இந்த செயற்கைக் கூட்டத்தில் டிடிவி தினகரன் முக்கிய முடிவுகளை எடுப்பார் என்று தெரிய வருகிறது.

மேலும், இந்த செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்படக்கூடிய முடிவு பாராளுமன்றத் தேர்தலுக்கான முக்கிய நகர்வாக அமையும் என்பதால் அக்கட்சியினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AMMK TTV Dhinakaran announce june 2023


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->