கண்திறந்து காட்சியளித்த அம்மன் சிலை - திருநெல்வேலியில் நடந்த அதிசயம்.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை மெயின் பஜாரில் புகழ்பெற்ற அற்புத விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் தனியாக எழுந்தருளியுள்ள அன்னை மூகாம்பிகை ஆலயத்தில் நேற்று மாலை 6.40 மணிக்கு கோவில் பூசாரி அம்மனுக்கு அலங்காரம் செய்து முடித்துவிட்டு பூஜைக்கு தயாராகி கொண்டிருந்தார்.

அப்போது, தனது மருமகளின் பிரசவம் நல்ல முறையில் நடைபெற வேண்டும் என்று வேண்டி அதே பகுதியை சேர்ந்த முத்து ஆச்சாரி தனது மனைவியுடன் ஆலயத்திற்கு வந்திருந்தார். அந்த நேரத்தில் மூகாம்பிகை கல்சிலையில் அம்மன் கண்களில் இருந்து ஒருவிதமான ஒளி வருவதை முத்து ஆச்சாரி மனைவி பார்த்துள்ளார்.

இந்தத் தகவலை அருகில் இருந்த தனது கணவரிடம்தெரிவித்துள்ளார். அவரும் அதை பார்த்து வியந்து, அந்தத் தகவலை அங்கிருந்த பூசாரியை அழைத்து அம்மனின் கண்கள் திறந்திருப்பது போல் காட்சியளித்ததை பார்க்குமாறு கூறினார். உடனே அங்கிருந்த பக்தர்களும் திரண்டு வந்து பார்த்து தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பினர். 

இதைப்பார்த்த பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். அவர்களை நீண்ட வரிசையில் நிறுத்தி வரிசையாக பார்த்து செல்வதற்கு போலீசார் அனுமதித்தனர். வந்திருந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பழம், லட்டு பிரசாதமாக வழங்கபட்டது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

amman statue eye open in tirunelveli thisaiyanvilaivu


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->