அம்மா மருந்தகம் மூடுவிழாவா? கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் வெளியிட்ட அறிவிப்பு.!
AMMA MEDICAL SHOP
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, "கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்பட்டு வரும் அம்மா மருந்தகங்களை தமிழக அரசு மூடி வருவதாக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தவறான குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

இந்த ஆட்சி அமைந்ததும் அம்மா மருந்தகங்கள் எதுவும் மூடப்படவில்லை. மாறாக, கடந்த ஆண்டு இயங்கி வந்த அம்மா மருந்தகங்களின் எண்ணிக்கை 126. இந்த ஆட்சி அமைந்தவுடன் இந்த எண்ணிக்கை 131 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், ஆண்டுக்கு 60 மருத்துவமனைகள் வீதம் அடுத்த 5 ஆண்டுகளில் 300 புதிய கூட்டுறவு மருந்தகங்களை துவக்குவதற்கு கடந்த சட்டப்பேர்வை கூட்டத் தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.