எடப்பாடி பழனிசாமி பெயரை தவறிக்கூட சொல்லாத அமித்ஷா! கலக்கத்தில் அதிமுகவினர்!சைலண்ட் மூடில் எடப்பாடி! - Seithipunal
Seithipunal


நெல்லையில் நடைபெற்ற பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். 30 சட்டமன்றத் தொகுதிகளின் நிர்வாகிகள், பாஜக முக்கிய தலைவர்களான அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த சந்திப்பில் உரையாற்றிய அமித்ஷா,“தமிழ் மண்ணை வணங்கி என் உரையை தொடங்குகிறேன். புண்ணிய பூமியான தமிழ்நாட்டில் தமிழில் பேச முடியாததில் வருத்தம் உண்டு.

தமிழ்நாட்டைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். விரைவில் மாநிலங்களவை சபாநாயகராகவும் அமருவார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக தனியாக 18% வாக்குகளும், அதிமுக கூட்டணியுடன் சேர்த்து 21% வாக்குகளும் பெற்று மொத்தம் 39% வாக்குகளை பெற்றது.

எனவே 2026ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் பாஜக – அதிமுக கூட்டணி ஆட்சி அமையப்போகிறது. இந்த கூட்டணி வெறும் அரசியல் கூட்டணி அல்ல, மக்கள் முன்னேற்றத்திற்கான கூட்டணி” எனத் தெரிவித்துள்ளார்.மேலும் அவர்,“திமுகவை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்” என வலியுறுத்தினார்.

அமித்ஷாவின் இந்த பேச்சு மீண்டும் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி வரப்போவதை உறுதி செய்கின்றதாகக் கருதப்படுகிறது. ஆனால் இதில் ஒரு முக்கிய அம்சம் கவனத்தைக் கவர்ந்துள்ளது.

சில மாதங்களுக்கு முன் அளித்த பேட்டியிலும், தற்போது நிகழ்ச்சியிலும், அமித்ஷா எடப்பாடி பழனிசாமியின் பெயரை குறிப்பிடவில்லை.அப்போது அவர், “தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அதிமுகவைச் சேர்ந்தவரே முதல்வராக இருப்பார்” என்று மட்டும் குறிப்பிட்டார்.தற்போது கூட கூட்டணி ஆட்சி வரப்போவதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமியை நேரடியாகச் சொல்லவில்லை.

இதன் காரணமாக,“அமித்ஷா ஏன் தொடர்ந்து எடப்பாடியின் பெயரை தவிர்க்கிறார்?”“முதல்வர் வேட்பாளர் குறித்து பாஜக இன்னும் திறந்த மனதுடன் இருக்கிறதா?”என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

அதிமுக தரப்பில் எடப்பாடியை முதல்வராக முன்னிறுத்தும் முயற்சி நடைபெறுகின்ற நிலையில், பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்த அண்ணாமலை, “முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவு செய்வது பாஜக மேலிடமே” என்று முன்பு தெரிவித்திருந்தார். இதுவும் இந்த விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Amit Shah never misses Edappadi Palaniswami name AIADMK in turmoil Edappadi in silent mode


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->