குப்புற படுக்க வைச்ச கொரோனா நோயாளிகளை காப்பாற்றிவிடலாம்! விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு முடிவுகள் வெளியானது! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வெங்கமாக பரவி வரும் நிலையில், கொரோனா தடுப்பு மருந்து தொடர்பான ஆராய்ச்சிகள் நீளுகின்றன. இந்த நோயின் தீவிர தாக்கத்தால் நுரையீரல் பாதிக்கப்படுகிறது. அதனால் சுவாசிப்பதில் சிக்கலாகிறபோது, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவதால் நோயாளிகளை வென்டிலேட்டர்களில் வைக்கிறார்கள். 

இப்படி வென்டிலேட்டரில் வைக்கிற கொரோனா நோயாளிகளின் நிலை குறித்து, அமெரிக்காவில் நார்த்வெஸ்டெர்ன் பல்கலைக்கழகத்தின் அங்கமான பெய்ன்பெர்க் மருத்துவ கல்லூரி விஞ்ஞானிகள் ஆராய்ச்சி ஒன்றரை நடத்தி இருக்கிறார்கள்.

விஞ்ஞானிகள் அந்த ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ள முக்கிய அம்சங்கள்;-

மூச்சு விடுவதில் சிரமம் ஏற்ப்பட்டு வென்டிலேட்டர்களில் வைக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளை முகம் குப்புற படுக்க வைக்கும்போது, அது அவர்களின் சுவாசத்தை எளிதாக்கும். இதனால் அவர்களின் உயிரைக் காப்பாற்றி விடலாம். அதே நேரத்தில் முகம் குப்புற படுக்க வைப்பதால் அவர்களுக்கு நிரந்தர நரம்பு சேதத்தை ஏற்படுத்தி விடும்.

நரம்பு பாதிப்பானது, ரத்த ஓட்டம் குறைவது மற்றும் வீக்கம் குறைவதின் விளைவாகும்.

கொரோனா வைரஸ் தொற்று நோயில் இருந்து நோயாளிகள் மறுவாழ்வு பெறும்போது, மணிக்கட்டு, கணுக்கால் அல்லது தோள்பட்டை போன்ற முக்கியமான மூட்டுகளில் பலவீனம் ஏற்படும். இந்த உடல் பாகங்கள் உடலின் ஒரு பக்கத்தில் முற்றிலும் முடங்கி விடும். இது கொரோனா நோயாளிகளுக்கு அதிர்ச்சி தருகிற பிரச்சினையாகத்தான் இருக்கிறது. கொரோனா தவிர்த்து வேறு எந்த நோயினால் பாதிப்பட்ட நோயாளிகளிடமும் இந்தளவுக்கு நரம்பு பாதிப்புகள் காணப்படுவதில்லை.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர பாதிப்புக்குள்ளான 12 முதல் 15 சதவீதம் பேர், நிரந்தர நரம்பு பாதிப்பை சந்திக்கின்றனர். 

பெரும்பாலும் கோரோனோ தொற்று ஏற்பட்ட நோயாளிகளுக்கு மணிக்கட்டு பாதிப்பு, கணுக்கால் பாதிப்பு, கை செயல்பாட்டு இழப்பு, தோள்பட்டை முடக்கம் ஏற்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

america scientist new research about corona


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal