பிப்ரவரி 1ஆம் தேதி அல்ல.. இன்று முதல் அமலுக்கு வரும் புதிய உத்தரவு.. முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு.!!
all temple open today
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிப்பது குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நேற்று மதியம் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேற்று மாலை அறிவித்தார்.
பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும். கொரோனா பாதுகாப்பு மையங்களாக செயல்படும் கல்லூரிகள் தவிர்த்து மற்ற அனைத்து கல்லூரிகளும் பிப்ரவரி ஒன்று முதல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 28 ஆம் தேதி முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலான இரவு நேர ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படுகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 30 ஆம் தேதி அன்று முழு ஊரடங்கு கிடையாது.
இந்நிலையில், இன்று முதல் வழிபாட்டு தலங்களை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பிப்ரவரி 1 முதல் அனைத்து நாட்களிலும் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி என்று முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இன்று முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது.

இது குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இன்று முதல் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டு, பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.