அகில இந்திய தொழிற் தேர்வு.. தனித்தேர்வர்கள் கலந்துகொள்ள மாவட்ட ஆட்சியர் அழைப்பு!
All India Industrial Examination District Collector calls for the participation of independent candidates
அகில இந்திய தொழிற் தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்து கொள்ளலாம் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2026-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் டி.ஜி.டி-ல் நடத்தப்படும் அகில இந்திய தொழிற் தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்து கொள்ள தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறடக்கம் செய்து தேர்வு கட்டணம் ரூ.200 செலுத்தி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள மாவட்ட அரசினர் தொழிற் பயிற்சி நிலைய முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
தகுதியுள்ள விண்ணப்பதார்ர்களுக்கு முதனிலைத் தேர்வுகள் கருத்தியல் தேர்வு 04.11.2025 அன்றும் மற்றும் செய்முறை தேர்வு 05.11.2025 ஆகிய தேதிகளில் கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும். இதற்கான முழு வழிகாட்டுதல்கள் www.skilltraining.tn.gov.in. என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். தனித்தேர்வராக தேர்வு எழுத 22.09.2025 முதல் விண்ணப்பிக்கலாம்.
தனித்தேர்வராக விண்ணப்பிக்க கடைசி தேதி 08.10.2025 அதற்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. மேலும் இது தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ள திருவள்ளூர் உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரிலோ அல்லது dstotvlr2025@gmail.com என்ற மின்னஞ்சலிலோ அல்லது 9499055663 மற்றும் 8248333532 என்ற கைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்தார்.
English Summary
All India Industrial Examination District Collector calls for the participation of independent candidates