பொம்மை வாங்கி தருவதாக கூறி... 9 வயது சிறுமியிடம்... இளைஞர் செய்த காரியம்.! பாய்ந்தது போக்ஸோ.! - Seithipunal
Seithipunal


குடிபோதையில் வேலை வெட்டி இல்லாமல் சுற்றி திரிந்த இளைஞர் பக்கத்து வீட்டிலிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகேவுள்ள மேலூர் குப்பம் பகுதியைச் சார்ந்தவர் செல்வமுத்து. இவர் மர வேலைகள் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் ராஜேஷ் 23 வயதான ராஜேஷ் பத்தாவது வரை படித்திருக்கிறார். சில காலம் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களில் கூலி வேலை செய்து வந்த இவர் மதுவிற்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே சுற்றித்திரிந்து இருக்கிறார்.

இவர் மது போதையிலிருக்கும் போது தனது வீட்டுக்கு மாடிக்கு சென்று பக்கத்து வீட்டிலிருக்கும் பெண்களை அடிக்கடி கிண்டல் செய்வார் என்று தெரிகிறது. இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று  மது போதையிலிருந்த ராஜேஷ் தனது பக்கத்து வீட்டிலிருக்கும் ஒன்பது வயது சிறுமியை பொம்மை வாங்கி தருவதாக கூறி தனிய அழைத்துச் சென்று இருக்கிறார்.

பின்னர் ஆளில்லாத தனி இடத்திற்கு அழைத்துச் சென்று அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. மேலும் இதனை யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவேன் எனவும் இருட்டு இருக்கிறார். ஆனாலும் வீட்டிற்கு சென்று திரும்பி அழுது கொண்டே தனக்கு நடந்ததை பெற்றோரிடம் விவரித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர்  ஸ்ரீபெரும்புதூர் மகளிர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் ராஜேஷை அழைத்து  விசாரணை நடத்தியதில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் மீது போக்சோ வழக்கு பாய்ந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Alcoholic youth arrested for sexually harassing a nine year old girl


கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?Advertisement

கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?
Seithipunal
--> -->