கள்ளச்சாராயம்,பாலியல் குற்றங்களை தடுக்க தவறியதிமுக அரசை கண்டித்து அதிமுக தீர்மானம்!
AIADMK resolution condemning the DMK government for failing to prevent illicit liquor and sexual crimes
கடலூர் அதிமுக தெற்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில்தமிழ்நாட்டில்அபின்,கஞ்சா,கள்ளச்சாராயம்,பாலியல் குற்றங்களை தடுக்க தவறிய விடியா ஸ்டாலின் அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றபட்டது.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில்உள்ள அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்க அலுவலகத்தில் கடலூர் அதிமுக தெற்கு மாவட்டம் சார்பில் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டமானது கழக அமைப்பு செயலாளரும், கடலூர் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளருமான சொரத்தூர் இராஜேந்திரன், தலமையில் நடைபெற்றது.இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் அதிமுகவின் வாட்ஷப் குழுவிற்க்கான கியூ ஆர் கோட் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.
பின்னர் ஆலோசனை கூட்டத்தில் கழக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான, மாண்புமிகு எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாள் கடலூர் அதிமுக தெற்கு மாவட்டத்தில் எப்படியெல்லாம் சிறப்பாக கொண்டா வேண்டும் எனவும், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பு தேர்தலில் பங்கெடுத்து வெற்றி பெற செய்த அண்ணா தொழிலாளர்கள் ஊழியர்கள் மற்றும் கழக பொறுப்பாளர்களுக்கு நன்றி தெரிவிக்கபட்டது.
மேலும் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலுக்காக பாஜக உடன் கூட்டணி அமைத்து இந்த கூட்டணியை வெற்றி கூட்டணியாக அமைத்து கொடுத்த பொதுச்செயலாளர் அவர்களுக்கு நன்றிகளையும், பாராட்டுதல்களையும் தெரிவிக்கபட்டது.
தமிழ்நாட்டில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஊழல்களையே வாடிக்கையாக கொண்டு செயல்பட்டு வரும் ஸ்டாலின் அரசை வன்மையாக கண்டித்து தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றபட்டது.மேலும் தமிழ்நாட்டில் அபின், கஞ்சா, கள்ளச்சாராயம்,பாலியல் குற்றங்களை தடுக்க தவறிய விடியா ஸ்டாலின் அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றபட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் எம்.பி.எஸ்.சிவசுப்பிரமணியன், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் பக்தரட்சகன், அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளர் சூரியமூர்த்தி,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வழக்கறிஞர் இராஜசேகர்,கோவை மண்டல தகவல் தொழில்நுட்ப செயலாளர் இராதாகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்ப மாவட்ட செயலாளர் திருமலைவாசன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் வடக்குத்து கோவிந்தராஜ், பண்ருட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கமலகண்ணன், குறிஞ்சிப்பாடி கிழக்கு ஒன்றிய செயலாளர் பாஷ்யம், கடலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் வினோத், நெய்வேலி அண்ணா தொழிற்சங்க செயலாளர் வெற்றிவேல், நெய்வேலி நகரசெயலாளர் கோவிந்தராஜ், வடலூர் நகர செயலாளர் சி.எஸ் பாபு, குறிஞ்சிப்பாடி நகர செயலாளர் ஆனந்தபாஸ்கர் மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக சார்பு அணி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
English Summary
AIADMK resolution condemning the DMK government for failing to prevent illicit liquor and sexual crimes