தமிழகத்தின் 69% இட ஒதுக்கீட்டிற்கு ஆபத்து - தமிழக அரசுக்கு இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் எச்சரிக்கை.!! - Seithipunal
Seithipunal


அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக அரசுக்கு 69 விழுக்காடு இட ஒதுக்கீடு தொடர்பாக அவசர மற்றும் முக்கிய கோரிக்கையை வைத்துள்ளனர்.

இது தொடர்பான கோரிக்கையில், " தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 விழுக்காடு இட ஒதுக்கீடு குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பது தமிழக மக்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். 

மராத்தா இட ஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, மராத்தா இட ஒதுக்கீடு என்பது இரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், 50 விழுக்காட்டிற்கு மேல் மாநிலங்களில் அமலாகியுள்ள இட ஒதுக்கீடு தொடர்பான விவகாரத்திலும் இதே சூழ்நிலை ஏற்படலாம். 

இதனால், இட ஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்ற வழக்கில் தமிழக அரசு விரைந்து தேவையான நடவடிக்கையை எடுத்து, ஆவணங்களை தயார் செய்யும் பட்சத்திலேயே தமிழகத்தின் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கு பாதிப்பு இருக்காது " என்று தெரிவித்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AIADMK EPS and OPS Request to TN Govt about 69 Percentage Tamilnadu Reservation


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->