எதுக்கும் நாங்க அஞ்சமாட்டோம் - எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேச்சு.! - Seithipunal
Seithipunal


முன்னாள் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் மீது பதிவு செய்யப்படும் பொய்யான வழக்குகளை கண்டு அதிமுக அஞ்சாது என எடப்பாடி பழனிசாமி பேசினார்.

அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றி வந்த சி. விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம், சகோதரரின் வீடு, உதவியாளரின் வீடு உட்பட 50 க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழக இலஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். 

சோதனையின் முடிவில் 4.87 கிலோ தங்க நகைகள், ரூ.23.85 இலட்சம் ரொக்கம்,19 ஹார்ட் டிஸ்க் உட்பட முக்கிய ஆவணங்கள், 138 கனரக வாகனத்தின் ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக தமிழக இலஞ்ச ஒழிப்புத்துறை அறிவித்தத்து. ஆனால், இந்த அறிவிப்பை ஏற்க மறுத்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், தனது இல்லத்தில் இருந்து எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று தெரிவித்தார்.

இந்நிலையில், சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, "முன்னாள் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் மீது பதிவு செய்யப்படும் பொய்யான வழக்குகளை கண்டு அதிமுக அஞ்சாது. ஊரக உள்ளாட்சி தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெற்றதா?." என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK Edappadi Palanisamy Speech at Salem about Raid Issue


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal