அதிமுகவின் அதிரடி மூவ்! கோவை தெற்கு தேர்தல் ரத்தாகுமா...? - தேர்தல் ஆணையத்திடம் குவிந்த மனுக்கள்...! - Seithipunal
Seithipunal


கோவை நகரின் பல்வேறு தொகுதிகளில் வாக்காளர்களை இலக்காகக் கொண்டு பணப் பட்டுவாடா நடந்ததாக பரபரப்பான புகார்கள் எழுந்துள்ளன.

இந்த சூழலில், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன் தலைமையில் கட்சி நிர்வாகிகள், வக்கீல் அணியினர் இணைந்து கோவை அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ள தேர்தல் பொதுப் பார்வையாளர் பிரதாப்சிங்கை நேரில் சந்தித்து விரிவான மனு ஒன்றை சமர்ப்பித்தனர்.

அந்த மனுவில், கரூரை சேர்ந்த சிலர் குழுக்களாகச் செயல்பட்டு வீடு தோறும் சென்று வாக்காளர்களுக்கு பணம் வழங்கி வருவதாகவும், அந்த பணத்தை பெற்றவர்கள் குறிப்பிட்ட கட்சிக்கே வாக்களிக்க வேண்டும் என்று மிரட்டல் விடுப்பதாகவும் தெளிவாக தெரிவிக்கப்படுகிறது.

இத்தகைய முறைகேடுகள் தொகுதி முழுவதும் திட்டமிட்டு நடைபெற்று வருவதாகக் கூறி, கோவை தெற்கு தொகுதியில் நடைபெறும் தேர்தலை ரத்து செய்ய அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனுடன், பொதுமக்கள் மற்றும் தனிநபர்கள் சார்பிலும் தலைமை தேர்தல் ஆணையருக்கு ஏராளமான புகார் மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன; அவற்றிலும் பணப் பட்டுவாடா குறித்த குற்றச்சாட்டுகள் தீவிரமாக முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AIADMK bold move Coimbatore South election be cancelled Petitions piled up Election Commission


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->