மதுக்கடையால் மாசடையும் விவசாய நிலம், சமூக ஆர்வலர்கள் வேதனை..! - Seithipunal
Seithipunal


மதுக்கடையால் விவசாய நிலம் மாசடைவதால், சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த  அ.கோ. படைவீடு உராட்சிக்குட்பட்ட கேசவாபுரம்- பங்களாரோடு பகுதியில் அரசு மதுபானக்கடை ஒன்று  உள்ளது. படைவீடு -ஆரணி போக்குவரத்து சாலைக்கு அருகில் அமைந்துள்ள இந்த மதுக்கடைக்கு குடிகாரர்கள் படையெடுத்து வருகின்றனர். 

அவ்வாறு கடைதிறந்ததும் திரளும் குடிமகன்கள் எதிரே உள்ள விவசாய நிலங்களில் அமர்ந்து நாள் முழுக்க குடிக்கத் தொடங்குகின்றனர். போதை தலைகேறிய உடன் பாட்டில், நெகிழி டம்ளர்கள் உள்ளிட்ட  அனைத்தையும் அங்கே வீசிவிட்டுச் செல்கின்றனர்.

இதே போல இப்பகுதியில் கமண்டல நதிக்கரை ஓரத்தில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டுள்ள  அலியாத்பாத் அணைக்கட்டு ஒன்று உள்ளது. மரங்கள் அடர்ந்து இயற்கை எழிலுடன் காணப்படும் இப்பகுதிக்கும் படையெடுக்கும் குடிகாரர்கள் இந்த இடத்திலும் பாட்டில், நெகிழி குப்பைகளை வீசிச்செல்கின்றனர்.

மண்ணையும் இயற்கையையும் இப்படி மாசுபடுத்தும் இதுபோன்ற இடங்களில் குடிகாரர்களை அனுமதிக்க கூடாது என்றும் ஊராட்சியில் தேங்கிக்கிடக்கும் இதுபோன்ற நெகிழி குப்பைகளை ஊராட்சி நிர்வாகம் சேகரித்து மறு சுழற்சி செய்ய வேண்டும் எனவும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Agricultural land polluted by liquor, Social activists torment


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->